நியூசிலாந்தை திணற வைக்க துருப்பு சீட் இவர் தான்.. இவர்களால் கண்டிப்பாக முடியும்! சுனில் கவாஸ்கர்
நியூசிலாந்து அணிக்கு எதிராக கட்டாய வெற்றிப்பெற வேண்டிய போட்டிக்கு ஆப்கானிஸ்தான் சுழற் பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் உடற்தகுதி பெற்று அணியில் இடம் பெற வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றிப்பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறும்.
ஒருவேளை ஆப்கானிஸ்தான் வெற்றிப்பெற்றால், இந்தியா-நமீபியா போட்டியின் முடிவை பொறுத்து எந்த அணி அரையிறுதிக்கு தகுதிப்பெறும் என்பது தெரியவரும்.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழற் பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் உடற்தகுதி பெற்று பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அது நியூசிலாந்திற்கு எதிராக கூடுதல் பலமாக இருக்கும். ரஷீத் கான், முகமது நபி ஆகியோருடன் முஜீப் சேர்ந்தால் சிறப்பாக இருக்கும்.
இப்போது ஆப்கானிஸ்தான் தனது பலத்தை பயன்படுத்த வேண்டும்.
வருண் சக்ரவர்த்தியைப் போலவே முஜீப் உர் ரஹ்மானின் பந்தை கணிப்பது மிகவும் கடினம் மற்றும் அவரை விட கொஞ்சம் கூடுதலான அனுபவத்தைப் முஜீப் பெற்றிருப்பதால், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் துருப்பு சீட்டாக இருக்கப் போகிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முஜீப், ரஷீத் துருப்பு சீட்டாக இருப்பார்கள் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.