தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்! கவாஸ்கரின் 11 வீரர்கள் யார் யார்?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் 11 பேர் கொண்ட குழுவை தெரிவு செய்துள்ளார் ஜாம்பவான் கவாஸ்கர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இரு அணிகள் மோதும் டெஸ்ட் போட்டித் தொடர் நாளை தொடங்கவுள்ளது, இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் விளையாடவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நாளை முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனிலும், இரண்டாவது டெஸ்ட் கேப்டவுனில் ஜனவரி 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை, எனவே அதை முறியடிக்கும் நோக்கில் வீரர்கள் முனைப்புடன் களமிறங்குவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் முதல் டெஸ்டில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.
அதில், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், பும்ரா, முகம்மது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களை தவிர்த்து ஒட்டுமொத்த அணியில் ஸ்ரீகர் பரத், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் உள்ளனர்.