விராட்கோலிக்கு டி-20 போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு: வியப்பில் சுனில் கவாஸ்கர்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டு இருக்கும் செய்தியை கேட்டு வியப்படைந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 3வது டி 20 போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 52 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இன்று நடைபெறவுள்ள மூன்றாவது டி 20யில் போட்டியில் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கைக்கு எதிரான டி 20 தொடரிலும் விராட் கோலி ஓய்வில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளிவந்ததை தொடர்ந்து, விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஓய்வு தனக்கு மிகவும் வியப்பு அளித்து இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ள கருத்தில், வீரர் ஒருவர் ஆட்டத்தின் போது 40 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருக்கும் போது இரண்டு ஓவர்கள் தொடர்ச்சியாக non-striker's பகுதியில் இருந்தாலே அவர் அந்த ரன் குவிக்கும் பதத்தை இழந்து மீண்டும் அந்த ஃபார்மிற்கு வருவதற்கு சிறிது நேரம் எடுக்கும்.
அப்படி இருக்கையில் விராட் கோலி சில காலமாக தனது ஃபார்மை இழந்து தவித்து வந்த நிலையில், கடந்த போட்டியில் தான் அவர் 52 குவித்து மீண்டும் தனது ஃபார்மிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு ஓய்வு அறிவித்து இருப்பது என்னை வியப்பில் தள்ளியுள்ளது என தெரிவித்துள்ளார்.