பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்.., அவர் கூறும் புதிய விளக்கம்
பாஜகவில் இருந்து விலகி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்த காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில் இணைந்தார்
நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பாஜகவில் இருந்து விலகினார். மேலும், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல்வேறு குற்றச்சாட்டை கூறி வந்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
அவர் கூறியது..
இது குறித்து காயத்ரி ரகுராம் கூறியது, "என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுகவினர் தான். அதனால் தான் நன்றியை மறக்க கூடாது என்பதால் இந்த கட்சியில் இணைந்துள்ளேன்" என்றார்.
மேலும் அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "மக்களின் எண்ணங்களுக்கு உயிரூட்டி, அவற்றை நிறைவேற்ற களத்தில் தொடர்ந்து போராடும் இயக்கமாக இருக்கிறது அதிமுக. இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் நலனுக்கு முன்னுரிமை, பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றங்களுக்கு துணை நிற்பது போன்ற சமூக ஏற்றங்களுக்கு காரணமாக உள்ளது அதிமுக.
50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்து, மக்களின் இதயங்களில் இடம்பெற்றிருக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்வதோடு, எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் உரிய பாடத்தை புகட்டி வரும் எடப்பாடி பழனிசாமியின் கீழ் கழகம் வெற்றிநடை போட உழைப்போம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |