Flying Kiss சர்ச்சை! புளூபிலிம் பார்க்கும் போது ஏன்.. ராகுலுக்கு காயத்ரி ரகுராம் ஆதரவு
ராகுல் காந்தியின் சிக்னேச்சர் ஸ்டைல் ப்ளையிங் கிஸ் அவரது அன்பின் அடையாளம் என நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவாக பேசியுள்ளார்.
ராகுல் காந்தி மீது புகார்
ராகுல் காந்தி மக்களவையில் பாஜக பெண் எம்பிக்களை பார்த்து ப்ளையிங் கிஸ் கொடுப்பது போன்ற செய்கையை செய்தார் என மத்திய அமைச்சர் ஷோபா கரண்டலஜே மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை பார்த்து ராகுல் காந்தி ப்ளையிங் கிஸ் கொடுத்ததாகவும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
ராகுலின் முதல் அன்பின் அடையாளம்
இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார். அவர் அந்த பதிவில்," பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் முன்னிலையில் உணர்ச்சியால் முத்தமிடுவது பிரச்சனையாக இருக்கும் போது இருவரையும் கண்டிக்க வேண்டும். இருவரும் பாராளுமன்றத்திற்கு முத்தம் கொடுத்தனர்.
ராகுல் காந்தியின் சிக்னேச்சர் ஸ்டைல் ஃப்ளைங்கிஸ் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் அவர் தனது உரையை முடித்ததும் மேடையில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல் பாரத் ஜோடோவில் சிக்னேச்சர் ஸ்டைல் ஃப்ளைங்கிஸ் பொதுமக்களுக்கு அன்பின் அடையாளமாக வழங்கினார்.
ஆனால் பாஜக தலைவர்கள் சட்டசபையில் புளூபிலிம் பார்த்து பிடிபட்டுள்ளனர். பாஜக பெண் தலைவர்களிடம் இருந்து ஏன் குரல் கொடுக்கவில்லை?
பல பொதுக்கூட்டங்களில் பல பாஜக தலைவர்கள் பகிரங்கமாக பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை?" என ஆவேசமாக கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் முன்னிலையில் உணர்ச்சியால் முத்தமிடுவது பிரச்சனையாக இருக்கும் போது இருவரையும் கண்டிக்க வேண்டும். இருவரும் பாராளுமன்றத்திற்கு முத்தம் கொடுத்தனர்.
— Gayathri Raguramm ?? (@Gayatri_Raguram) August 9, 2023
ராகுல் காந்தியின் சிக்னேச்சர் ஸ்டைல் ஃப்ளைங்கிஸ்- ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் அவர் தனது உரையை… pic.twitter.com/7bbdzAU3lX
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |