இலங்கைக்கு எதிரான டி20 தொடர்! எந்த இடத்திலும் இறங்கி அடித்து நொறுக்க தயார்: கெயில் உறுதி
இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக, மேற்கிந்திய தீவு அணியில் இடம் பிடித்துள்ள கெய்ல், எந்த இடத்திலும் இறங்கி அடிக்க தயார் என்று ஓபன் ஸ்டெட்மேண்ட் கொடுத்துள்ளார்.
மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என விளையாடவுள்ளது.
முதலில் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த டி20 தொடருக்கான மேற்கிந்திய தீவு அணியில் அனுபவம் வாய்ந்த அதிரடி மன்னன் கெய்லுக்கு(42) வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் டி20 லீக் தொடரில் சிறப்பாக விளையாடியதால், அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது குறித்து கெய்ல் கூறுகையில், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 3-வது இடத்தில் களம் இறங்கி விளையாடினேன். என்னை மூன்றாவதாக விளையாட வைத்தது பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அணில் கும்ப்ளேதான்.
அந்த அணியில் அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் துவக்கத்தில் சிறப்பாக விளையாடினார். அதனைத் தொடர்ந்து என்னுடைய அனுபவத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவே 3-வது இடத்தில் களம் இறங்கி விளையாட வைத்தனர்.
இது எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது. சுழற்பந்து மற்றும் வேகப்பந்து என எதுவாக இருந்தாலும் சிறப்பாக விளையாடுவேன், எந்த இடத்தில் இறக்கவிட்டாலும், என்னுடைய சிறப்பான ஆட்டத்தை கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
