சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ‘யூனிவர்சல் பாஸ்’ ? ரசிகர்களுக்கு சர்பரைஸ் கொடுத்த கெய்ல்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்களில் அவுட்டான கிறிஸ் கெய்ல், கேலாகலமாக ரசிகர்களுக்கு பேட்டை உயர்த்தி காட்டிய படி ஆடுகளத்திலிருந்து வெளியேறியது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே இழந்துவிட்டது.
இந்நிலையில், இன்று அபுதாபியில் நடைபெற்று வரும் போட்டியில் குரூப் 1ல் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளும் அதன் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் விளையாடின.
இப்போட்டியில் தோற்றால் ஆஸ்திரேலிய அணி கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா உடனான போட்டிக்கு பின் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸின் ஆல்-ரவுண்டர் பிராவோ நேற்றே அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸின் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய யூனிவர்சல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவுட்டாகிய கெய்ல் பேட்டையும் ஹெல்மட்டையும் ரசிகர்களுக்கு உயர்த்திக் காட்டிய படி ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
பின், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் கெய்லை கட்டி தழுவி வாழ்த்தினர்.
இதன் மூலம் கெய்ல், இந்த போட்டியுடன் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை சூசகமாக அறிவித்தாரா என ரசிகர்களிடையே கேள்வி நிலவுகிறது.
கெய்ல் ஏற்கனவே ஓய்வு பெற்று மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Chris Gayle! ❤️#WIvsAUS pic.twitter.com/ZpHN3YkZrm
— 'Z (@_NyrraZo) November 6, 2021
எனினும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், கெய்ல் தொடர்ந்து வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாடுவார் என கூறப்படுகிறது.
அதேசமயம், தனது கடைசி பேட்டியில் பேட்டிங் செய்த பிராவோ 10 ரன்களில் அவுட்டாகினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில ்அபார வெற்றிப்பெற்றது.