காசா மருத்துவமனை தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது: இந்திய பிரதமர் வேதனை
காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
காசா மருத்துவமனை தாக்குதல்
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்து அரபு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு சென்ற நிலையில், காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் சிறுவர்கள், நோயாளிகள் என 500 பேர் வரை பலியாகியுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடி
இந்நிலையில், காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, சம்மந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.
இந்த மோதலில் தொடர்ச்சியாக பொதுமக்கள்உயிரிழப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |