இஸ்ரேல் - ஹமாஸ் விவகாரம்... பிரபல பிரெஞ்சு கால்பந்து நட்சத்திரத்தை தீவிரவாதி என்ற அமைச்சர்
இஸ்லாமிய தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய பிரான்ஸ் உள்விவகார அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தை நாட நேரிடும் என பிரபல பிரெஞ்சு கால்பந்து நட்சத்திரம் கரீம் பென்சிமா எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய மக்களுக்காக
காஸா மக்களுக்கு ஆதரவாக தமது சமூக ஊடக பக்கத்தில் கரீம் பென்சிமா பதிவு செய்த நிலையிலேயே பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Gérald Darmanin எதிர்வினையாற்றியுள்ளார்.
ஹமாஸ் படைகளால் படுகொலை செய்யப்பட்ட 1,400 இஸ்ரேலிய மக்களுக்காக கரீம் பென்சிமா வருத்தம் தெரிவிக்காததையும் அமைச்சர் Gérald Darmanin சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் அவருக்கு தொடர்பிருப்பது பலரும் அறிந்த விடயம் தான் என்றார். இந்த நிலையில், தற்போது சவுதி அரேபியாவில் வசிக்கும் கரீம் பென்சிமா தமது பாரிஸ் நகர சட்டத்தரணி ஊடாக, அமைச்சருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெடிகுண்டுகளுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு ஆதரவாக கருத்து கூறுவது என்பது ஒரு அமைப்பின் பரப்புரை சார்ந்ததல்ல எனவும், அது பயங்கரவாதம் தொடர்புடையதும் அல்ல என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நாடுகளில்
அமைச்சர் Gérald Darmanin குறிப்பிட்ட Muslim Brotherhood என்ற அமைப்பானது எகிப்தில் 80 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது. ஹமாஸ் படைகள் உட்பட சமகால பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளுக்கு முன்னோடி.
@afp
இந்த அமைப்பானது சவுதி அரேபியா, எகிப்து மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகளில் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கருதவில்லை என்பதால் எந்த தடையும் இதுவரை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |