பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை மோசமான வார்த்தைகளால் மிரட்டிய காசா ஆதரவாளர்: பிரான்சில் அதிகரிக்கும் பதற்றம்
இஸ்ரேல் காசா போர் துவங்கியதிலிருந்தே, பிரான்சில் யூதர்களுக்கெதிரான தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. அவ்வகையில், பிரான்சிலுள்ள பள்ளி ஒன்றிற்குள் நுழைந்த காசா ஆதரவாளர் ஒருவர், ஆசிரியை ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியையை மோசமான வார்த்தைகளால் மிரட்டிய காசா ஆதரவாளர்
பிரான்சிலுள்ள Champigny-sur-Marne என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றிற்குள் காசா ஆதரவாளர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார்.
அவர் அந்தப் பள்ளியின் இயக்குநரான ஆசிரியைக் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், மோசமான வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளார்.
Credit: Getty
நான் உன்னை வன்புணரப்போகிறேன், உன்னை கொல்லப்போகிறேன், நான் ஆட்களுடன் திரும்பி வந்து காசாவிலுள்ளவர்களின் நிலைமையைப்போல உன் நிலைமையை ஆக்கப்போகிறேன் என மிரட்டியதுடன், ஆறு அங்குல நீளமுள்ள ஒரு கத்தியையும் காட்டி அந்த ஆசிரியை மிரட்டியுள்ளார்.
நடுங்கிப்போன ஆசிரியை
இந்த சம்பவத்தால் அந்த ஆசிரியை நடுங்கிப்போயிருக்கிறார். அதே நேரத்தில், அந்தப் பள்ளியில் பல யூத மாணவ மாணவியர் படிப்பதால், அவர்களை மற்ற ஆசிரியைகள் பத்திரமாக வேறொரு வகுப்புக்குள் மறைத்துவைத்து பாதுகாத்துள்ளார்கள்.
Credit: Getty
அந்த ஆசிரியை உடனடியாக தகவலளித்ததன்பேரில் பொலிசார் பள்ளிக்கு விரைந்துள்ளார்கள். ஆனால், அதற்குள் மிரட்டல் விடுத்த நபர் தப்பியோடியுள்ளார், பொலிசார் வழக்குப் பதிவு செய்து, அந்த நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |