இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடத்தப்படும் என்றும், வேட்புமனுக்கள் 2024 ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் நவம்பர் 17, 2024 இல் முடிவடைகிறது என்றும், ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு ஒரு மாதத்திற்குக் குறையாமலும், இரண்டு மாதங்களுக்கு முன்னரே பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், 2024 ஆகஸ்டு 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தினமாகவும், இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தை மேற்படி தேர்தலுக்கான வேட்பாளர்களின் நியமன இடமாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு பிரகடனப்படுத்துகிறது.
இதனடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கான திகதியாக 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி அறவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |