சென்னையில் சாலைக்கு அஸ்வின் பெயரை சூட்ட மாநகராட்சி முடிவு
சென்னையில் அஸ்வின் வசித்து வரும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின்
சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த 15 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது(11முறை), உட்பட பல்வேறு சாதனைகளை படைத்துள்ள அஸ்வின், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு அறிவித்தார்.
ஐபிஎல் தொடரில், 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரை CSK அணிக்காக விளையாடி வந்த அஸ்வின், அதன் பின்னர், புனே, டெல்லி ஆகிய அணிகளில் இடம்பெற்றார்.
ஐபிஎல் ஏலத்தில் ரூ.9.78 கோடிக்கு CSK அணியால் வாங்கப்பட்ட அஸ்வின், நாளை தொடங்க உள்ள 18 வது ஐபிஎல் தொடரில் மீண்டும் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.
சாலைக்கு அஸ்வின் பெயர்
கடந்த ஜனவரி மாதம் இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி அஸ்வினை கௌரவப்படுத்தியது.
இந்நிலையில், சென்னை மாமன்ற கூட்டத்தில், அஸ்வின் வசித்து வரும் மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணபுரம் 1ஆம் தெரு அல்லது ஆரிய கவுடா சாலைக்கு அவரது பெயரை வைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அஸ்வினுக்கு சொந்தமான கேரம் பந்து ஈவென்ட் & மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் (Carrom Ball Event & Marketing Pvt Ltd)நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலர் கார்த்திக் இந்த கோரிக்கை மனுவை அளித்திருந்தார்.
இதற்கு மாநகராட்சி ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |