க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மூன்று மாதங்களில் வெளியிடப்படும் என தகவல்
மூன்று மாதங்களில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டு மார்ச் மாதம் 6ம் திகதி நிறைவடைந்தது.
இன்றையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளுக்காக சில பாடசாலைகள் எதிர்வரும் 12ம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுக்கு இலக்கான 284 மாணவ மாணவியர் பரீட்சைக்கு தோற்றிய போதிலும் அவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இன்றி பரீட்சைக்கு தோற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளும் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும், பெறுபேறு வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.