ஏற்கனவே இருக்கும் தொல்லை போதாதென்று... ஜேர்மனியில் புலம்பெயர்தலுக்கு எதிராக மீண்டும் ஒரு அமைப்பு
ஜேர்மன் மக்களுக்கு தேர்தல் வரும்போதெல்லாம் வலதுசாரிகளைக் குறித்து பயம் வந்துவிடும்.
ஜேர்மனியின் குறிப்பிட்ட சில மாகாணங்களில் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சிக்கு ஆதரவு பெருகி வந்தாலும், தேர்தல் வரும்போதெல்லாம் எப்படியாவது மற்ற அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் சேர்ந்து அக்கட்சி ஆட்சிக்கு வராமல் தடுத்துவிடுகிறார்கள்.

இந்நிலையில், ஏற்கனவே இருக்கும் தொல்லை போதாதென்று, புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது AfD கட்சி.
புலம்பெயர்தலுக்கு எதிராக மீண்டும் ஒரு அமைப்பு
ஆம், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சி, புதிதாக இளைஞர் அணி ஒன்றை உருவாக்கியுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள AfD கட்சியின் இளைஞர் அணிக்கு Generation Deutschland (GD) என்று பெயரிடப்பட்டுள்ளது.
800க்கும் அதிகமான இளைஞர்கள் அந்த அமைப்பில் இணைந்துள்ளார்கள்.
இந்நிலையில், GD அமைப்பின் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் Giessen நகரில் பொதுமக்கள் சுமார் 25,000 பேர் திரண்டு பேரணி நடத்தியுள்ளார்கள்.

பாதுகாப்புக்காக 5,000 பொலிசார் களமிறக்கப்பட்ட நிலையில், 10 முதல் 15 பொலிசார் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |