சார்ஜ் போட்டால் 173 கி.மீ வரை பயணிக்கும் கியர் வைத்த எலக்ட்ரிக் பைக் அறிமுகம்.., விலை எவ்வளவு?
இந்தியாவில் தனது கியர் வைத்த முதல் எலெக்ட்ரிக் பைக்காக ஏரா என்ற பைக்கை (Electric Bike Matter Aera) மேட்டர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கியர் வைத்த எலக்ட்ரிக் பைக் அறிமுகம்
மேட்டர் நிறுவனம் தனது கியர் வைத்த முதல் எலெக்ட்ரிக் பைக்காக ஏரா என்ற பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கானது ரூ1.93 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.
இந்த பைக்கை ஒரு முறை சார்ஜ் போட்டால் 173 கி.மீ வரை பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த செலவில் நாம் பயணம் செய்யலாம். தற்போது இந்த பைக்கானது டெல்லியில் மட்டும் கிடைக்கும். மற்ற பகுதிகளில் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும்.
இதில், Hyper Swift 4 speed manual gearbox பொருத்தப்பட்டுள்ளது. மேலும், Manual control, electric performance, connected system ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் 5kWh அதிக பவர் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது, 0-40 கி.மீ வேகத்தை வெறும் 2.8 நொடியில் பிக்கப் செய்து விடும். இந்த பைக்கில் Liquid cooled system வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த பைக்கில் ஒரு கி.மீ பயணிக்க வெறும் ரூ.25 பைசா தான் செலவாகும். அதன்படி, தொடர்ந்து 3 ஆண்டுகள் இந்த பைக்கை இயக்கினால் ரூ.1 லட்சம் மிச்சமாகும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |