பெர்லினில் 45,000 வீடுகள் இருளில் மூழ்கிய விவகாரம்: ஒரு மில்லியன் யூரோக்கள் பரிசு அறிவித்ததன் விளைவு
ஜேர்மன் தலைநகர் பெர்லினில், 45,000 வீடுகள் இருளில் மூழ்கிய விடயம் தொடர்பில் துப்புக் கொடுத்தால் ஒரு மில்லியன் யூரோக்கள் பரிசு வழங்கப்படும் என ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்.
இருளில் மூழ்கிய 45,000 வீடுகள்
ஜனவரி மாதம் 3ஆம் திகதி இரவு, பெர்லினிலுள்ள Lichterfelde என்னுமிடத்தில் அமைந்துள்ள மின் நிலையம் ஒன்றில் தீப்பற்றியது.

அதன் காரணமாக, தென்மேற்கு பெர்லினிலுள்ள 45,000 வீடுகளிலும், 2,200 அலுவலகங்களிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் அவதியுற நேர்ந்தது.
நிலைமை சீரடைய நான்கு நாட்கள் வரை மக்கள் காத்திருக்கவேண்டியிருந்தது.
துப்புக் கொடுத்தால் ஒரு மில்லியன் யூரோக்கள்
இந்நிலையில், அதன் பின்னணியில் சதிவேலை இருப்பதாக பொலிசாருக்கு சந்தேகம் ஏற்படவே, அந்த சம்பவம் தொடர்பில் துப்புக்கொடுத்தால், சம்பந்தப்பட்ட நபர்களின் கைதுக்கு அது உதவும் என்றால், துப்புக் கொடுப்பவர்களுக்கு ஒரு மில்லியன் யூரோக்கள் வழங்கப்படும் என ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்.

அதைத் தொடர்ந்து, அந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுக்கு துப்புக் கொடுக்க ஏராளமானோர் முன்வந்துள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் (Alexander Dobrindt) தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |