ஜேர்மனியில் Gen Z இளைஞர்கள் போராட்டம்: முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகள்
Gen Z demonstrators Protests Surge Across Germany: அரசியல் மாற்றம் மற்றும் பல்வேறு உரிமைகளை கோரி ஜென் ஜி(Gen Z) இளைஞர்கள் ஜேர்மன் நகரங்களில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஜேர்மனியில் Gen Z இளைஞர்கள் போராட்டம்
ஜேர்மனியின் அரசியலில் இளைஞர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க உறுதியளிக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான ஜென் ஜி(Gen Z) இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிட்டத்தட்ட ஜேர்மனியின் 34 நகரங்களும் அதிகமான இடங்களில் இந்த போராட்டமானது பரவியுள்ளது.

நாடு முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 1,20,000 பேர் கலந்து கொண்டு இருப்பதாக இந்த போராட்டத்தின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை உள்ளூர் காவல் துறையினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
ஜேர்மனியில் உருவாகியுள்ள போராட்டம் தற்போது ஐரோப்பா முழுவதும் பரவி வரும் இளைஞர் இயக்கங்களின் எழுச்சியாகவே பார்க்கப்படுகிறது.
Gen Z இளைஞர்களின் முக்கிய கோரிக்கைகள்
அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை அதிகரிக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தி கல்வி ஆதாரங்களை அதிகரிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

வாழ்க்கை செலவின பிரச்சினைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டாய இராணுவ சேவையை கொண்டு வருவதற்கான முயற்சியை அரசு முழுமையாக கைவிட வேண்டும்.
பருவநிலை மாற்றத்தை வலுவாக எதிர்கொள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.