ஜேர்மனியில் Gen Z போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பொலிஸார் காயம்: 54 பேர் கைது
Gen Z Protest in Germany 100 police injured: ஜேர்மனியில் Gen Z-களின் பேரணி போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், 100க்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம்
சிறந்த கல்வி மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி ஜேர்மனியில் பல நகரங்களில் ஜேர்மனியில் Gen Z தலைமுறையினர் அமைதியான முறையில் பேரணிகளை தொடங்கினர்.
ஆனால் வார இறுதியில் இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பிராங்க்பர்ட் நகரில் நடந்த வன்முறை சம்பவங்களில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
இதில் காவலர் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ஹெஸ்ஸே மாநில உள்துறை அமைச்சர் ரோமன் போசெக் உறுதிப்படுத்தியுள்ளார்.

போராட்டங்களில் வன்முறையில் இறங்கிய நபர்களை கட்டுப்படுத்த சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை சுமார் 1300 பொலிஸார் களமிறக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும் கலவரக்காரர்கள் 17 சில்லறை விற்பனை கடைகளை சேதப்படுத்தியதுடன், 5 கடைகளை சூறையாடியுள்ளனர்.
8000 க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டங்களில் கலந்து கொண்ட நிலையில் 1000 முதல் 1500 பேர் கொண்ட கும்பலே இந்த வன்முறையை தூண்டி விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் வன்முறையில் ஈடுபட்ட 13 முதல் 29 வயதுடைய 54 பேரை பொலிஸார் உடனடியாக கைது செய்து காவலில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பலருக்கு புலம்பெயர்ந்தவர்களின் பின்னணி உள்ளது. இருப்பினும் போராட்டங்களில் கலவரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஜேர்மன் குடியுரிமையை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.