கிரிக்கெட்டில் ஆண், பெண் இணைந்து விளையாடும் டெஸ்ட் 20 அறிமுகம்; இலங்கையில் தொடக்கம்

Cricket Sri Lanka
By Karthikraja Oct 16, 2026 01:33 PM GMT
Report

gender mixed format test 20 cricket to launch in sri lanka: ஆண், பெண் இணைந்து விளையாடும் டெஸ்ட் 20 கிரிக்கெட் தொடர், நவம்பர் 14 ஆம் திகதி இலங்கையில் தொடங்க உள்ளது.

இலங்கையில் டெஸ்ட் 20 தொடர்

கிரிக்கெட்டில் இதுவரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 என 3 வடிவங்களே உள்ள நிலையில், முதல்முறையாக Test Twenty என்னும் 4வது வடிவம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

கிரிக்கெட்டில் ஆண், பெண் இணைந்து விளையாடும் டெஸ்ட் 20 அறிமுகம்; இலங்கையில் தொடக்கம் | Gender Mixed Test 20 Cricket To Launch In Srilanka

இந்த டெஸ்ட் 20 தொடர், இலங்கையின் கொழும்பில் உள்ள சிங்கள விளையாட்டு மன்றத்தில் (SSC) 2026 நவம்பர் 14 முதல் 29 வரை நடைபெற உள்ளது.

இந்த தொடரில் விளையாட, உலகம் முழுவதிலுமிருந்து 13 முதல் 21 வயதுக்குட்பட்ட 160 இளம் கிரிக்கெட் வீரர்கள், 4 கண்ட அணிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கொழும்புக்கு வர உள்ளார்கள்.

ஒவ்வொரு கண்ட அணியிலும், 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் என 40 பேர் இருப்பார்கள்.

ஒவ்வொரு போட்டியிலும், பெண்கள் XI அணியும் பெண்கள் XI அணியும் மோதும், அதே நேரத்தில் ஆண்கள் XI அணியும், ஆண்கள் XI அணியை எதிர்கொள்ளும். 

விவாகரத்தால் மதுவுக்கு அடிமையானேன்; மனம் திறந்த யுவேந்திர சாஹல்

விவாகரத்தால் மதுவுக்கு அடிமையானேன்; மனம் திறந்த யுவேந்திர சாஹல்

ஆண்கள் மற்றும் பெண்கள் அணி எடுத்த ஓட்டங்கள், மொத்தமாக அணியின் ஓட்டமாக சேர்க்கப்படும்.

ஒவ்வொரு போட்டியும் ஒரே நாளில் 80 ஓவர்கள் நடைபெறும். முதல் 40 ஓவர்கள் பகல் நேரத்தில், வெள்ளை நிற சீருடையில், சிவப்புப் பந்துடன் விளையாடப்படும். கடைசி 40 ஓவர்கள் மின்விளக்குகளின் கீழ், வண்ண சீருடையில், வெள்ளைப் பந்துடன் விளையாடப்படும்.

ஒரே போட்டியில் சிவப்புப் பந்தும் வெள்ளைப் பந்தும் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

நாணய சுழற்சியில், எந்த அணி முதலில் துடுப்பாட்டம் செய்வது என்பதைத் தீர்மானிப்பதுடன், பெண்கள் போட்டியா அல்லது ஆண்கள் போட்டியா முதலில் நடைபெறும் என்பதையும் தீர்மானிக்கும்.

5 கண்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர்.

கடந்த 300 நாட்களில் களத்திலும், இணையத்திலும் நடைபெற்ற தேர்வுகள் மூலம், இந்தியாவின் பிரபல பயிற்சியாளர்களில் ஒருவரான ராஜ்குமார் சர்மா தலைமையிலான உலகளாவிய தேர்வுக் குழு, அவர்களிலிருந்து மிகச் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த மாத இறுதியில் நடைபெறும் வீரர்களின் வரைவுத் தேர்வில், டெஸ்ட் இருபது அணிகளின் தொடக்கக் குழுவான, 80 பெண்கள் மற்றும் 80 ஆண்கள் அடங்கிய இறுதி 160 பேர் கொண்ட அணி அறிவிக்கப்படும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெஸ்ட் 20 நிறுவனர் கௌரவ் பஹிர்வானி, "இந்தத் தொடரானது இளம் வீரர்களுக்கு ஒரு புதிய கிரிக்கெட் வடிவத்தையும் தளத்தையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு அணியின் வெற்றிக்கு சிறுவர் மற்றும் சிறுமியரின் செயல்பாடுகள் சமமாகப் பங்களிக்கும்.

இலங்கை தன் இளம் கிரிக்கெட் வீரர்களை நேசிப்பது போல், உலகில் வேறு எந்த நாடும் நேசிப்பதில்லை. எங்களின் முதல் சந்திப்பிலிருந்தே, இலங்கை கிரிக்கெட்டின் தலைமை மிகவும் ஆதரவாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருந்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US