முதலமைச்சர் மகனுடன் திருமணம், இந்தியளவில் முன்னணி நடிகை..ஜெனிலியாவின் சொத்து மதிப்பு
பிரபல நடிகை ஜெனிலியா டி'சோஸாவின் சொத்து மதிப்பு விபரம் குறித்து இங்கே காண்போம்.
ஜெனிலியா டி'சோஸா
தமிழில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜெனிலியா டி'சோஸா.
அதனைத் தொடர்ந்து சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
மும்பையைச் சேர்ந்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
தற்போது 38வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஜெனிலியா, 2012ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரின் மகனும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டார்.
சொத்து மதிப்பு
திருமணத்திற்கு பின்னும் நடிப்பை தொடரும் ஜெனிலியா, சமீபத்தில் வெளியான ஆமிர்கானின் 'சித்தாரே ஜாமீன் பர்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதுடன் வசூலிலும் சக்கைபோடு போட்டது.
ஜெனிலியா நடிப்பு மட்டுமின்றி மூன்று திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார். ராஜ சிவாஜி என்ற திரைப்படம் இவரது தயாரிப்பில் உருவாகி வருகிறது.
மேலும் விளம்பரங்கள், பிராண்ட் ஒப்பந்தங்கள், அதிக ஊதியம் மூலம் தனது வருமானத்தை ஈட்டி வரும் ஜெனிலியாவின் சொத்து மதிப்பு ரூ.140 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |