சூடுப்பிடிக்கும் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் - வெளியான முக்கிய தகவல்!
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் திங்கள்கிழமை (11) நள்ளிரவுடன் முடிவடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திங்கள்கிழமை நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் வியாழன் (14) வரை மௌன காலம் அமலில் இருக்கும்.
இந்த காலகட்டத்தில் எந்தவொரு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் நடைபெறாது.
மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறும் எந்தவொரு தரப்பினரையும் கைது செய்வதற்கும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த நாட்களில் வாக்களிக்க முடியாத தபால்மூல வாக்காளர்கள் இன்றும் (07) நாளையும் (08) தமது பணியிடத்திற்கு அமைய மாவட்ட செயலகத்தில் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |