பொதுத்தேர்தல்... பரபரப்பாகும் ஜேர்மனி
ஜேர்மனி ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தாலும், ஜேர்மன் பொதுத்தேர்தல்கள் எப்போதுமே பரபரப்பாக இருந்ததில்லை. ஆனால், இம்முறை அப்படியில்லை!
பரபரப்பாகும் ஜேர்மனி
சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, ஜேர்மனியின் CDU/CSU கட்சிகள் 30 சதவிகித ஆதரவுடன் முன்னிலை வகிக்கின்றன.
அதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருப்பதோ, புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி.
அக்கட்சிக்கு, சுமார் 22 சதவிகித ஆதரவு நிலவுகிறது.
ஆளும் ஓலாஃப் ஷோல்ஸின் கூட்டணியோ பின்தங்கியுள்ளது. கூட்டணியிலுள்ள SPD Social Democrats கட்சிக்கு 17 சதவிகித ஆதரவு மட்டுமே உள்ளது.
கிரீன்ஸ் கட்சிக்கு 13 சதவிகித ஆதரவு உள்ளது, FDP மற்றும் BSW Sahra Wagenknecht கூட்டணிக்கோ 5 சதவிகித ஆதரவு கூட இல்லை.
வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சிக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது என்றாலும், அக்கட்சி ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என ஜேர்மன் மக்களில் மூன்றில் இரு பங்கு மக்கள் கருதுகிறார்கள்.
40 சதவிகிதம் மக்கள் AfD கட்சியே இருக்கக்கூடாது என்கிறார்கள்.
இதற்கிடையில், ஜேர்மன் அரசியலில் அமெரிக்காவின் தலையீடு அதிகாமகைவருகிறது.
அமெரிக்க துணை ஜனாதிபதியாக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள JD வேன்ஸ், சமீபத்தில் ஜேர்மனியில் நடைபெற்ற மியூனிக் மாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டார்.
அவர் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸை சந்திக்காமல், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான AfD கட்சியின் தலைவரான ஆலிஸ் வீடலை (Alice Weidel) சந்தித்துச் சென்றுள்ளார்.
அதேபோல, ட்ரம்பின் நண்பரும் கோடீஸ்வரருமான எலான் மஸ்கும் AfD கட்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ஆக, இம்முறை ஜேர்மன் தேர்தல் முடிவுகள் எப்படியாக இருக்கும் என இப்போதைக்கு உறுதியாகக் கூறமுடியவில்லை. எப்படியும் பொதுத்தேர்தல்களுக்கு முன் வழக்கத்துக்கு மாறாக ஜேர்மனி பரபரப்பாக காணப்படுகிறது என்பது மட்டும் உண்மை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |