ஜேர்மன் பூனைகளுக்கு ஆகத்து மாதம் வரை பொது முடக்கம்: சுவாரஸ்ய பின்னணி
ஜேர்மனியில் பூனை வைத்திருப்பவர்கள் சிலர், அவற்றை ஆகத்து மாத இறுதி வரை வீட்டுக்குள் அடைத்து வைத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்கள்.
அதற்குக் காரணம், Crested lark என்னும் அபூர்வப் பறவைகளின் இனப்பெருக்கக் காலம் இது.
அந்தப் பறவைகள் தரையில்தான் தங்கள் கூடுகளைக் கட்டும் என்பதால், எளிதில் அவற்றின் குஞ்சுகள் பூனைகளுக்கு இரையாகிவிடக்கூடும்.
கடந்த சில ஆண்டுகளாக Crested lark பறவைகளின் எண்ணிக்கை மேற்கு ஐரோப்பாவில் வெகுவாக குறைந்து வருகிறது. ஆகவே, அந்தப் பறவைகள் பொரிக்கும் ஒவ்வொரு குஞ்சும் மிகவும் விலையேறப்பெற்றது.
எனவே, அந்தப் பறவைகளைக் காப்பதற்காக தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் மீண்டும் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.