சின்ன சின்ன நோய்களும் உடனடி நிவாரணம் அளிக்கும் ஆயுர்வேத வைத்தியம்! இதோ சில உங்களுக்காக
Fever
Vomiting
Indigestion
Acidity
By Kishanthini
உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களுக்கு ஒரு சில ஆயுர்வே வைத்தியங்கள் பெரிதும் உதவி புரிகின்றது. தற்போது அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
- காய்ச்சல் உண்டாகும் போது கீழாநெல்லி அல்லது துளசி இலையின் புதிய சாறு எடுத்து 10 மில்லி அளவு போதுமானது. அதில் மிளகுத்தூள் 5 மில்லி அளவு கலந்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.
- தினமும் இரண்டு முறை சீந்தில் கொடி அல்லது தும்பை பூவின் புதிய சாறு 10 மில்லி அளவு எடுத்து தினமும் இரண்டு வேளை குடிக்கலாம்.
- புதிய ஆடாதோடா இலையை எடுத்து சுத்தம் செய்து சாறை எடுக்கவும்.
இஞ்சி சாறு - 5 மில்லி அளவு
தேன் 5 மில்லி
மூன்றையும் கலந்து தினமும் இரண்டு வேளை எடுத்து வந்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
- சளி பிரச்சனை இருக்கும் போது தேன் அல்லது சிறிது உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு குடிக்கலாம். இது வைட்டமின் சி என்பதால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
- அசிடிட்டி அதிகமாக இருந்தால் கடுக்காய், கரிசலாங்கண்ணி பொடி, வெல்லத்தூள் சம அளவு எடுத்து சாப்பிட்டால் அசிடிட்டிக்கு நிவாரணம் கிடைக்கும்.
- மாம்பழத்தின் பட்டை 20 கிராம் அளவு எடுத்து கஷாயம் வைத்து குடித்தால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
- கொத்துமல்லித்தண்ணீருடன் வெட்டிவேர் தூளை கலந்து மீண்டும் மீண்டும் குடித்துவந்தால் வாந்தி மட்டுப்படும்.
- வெந்நீரில் கல் உப்பு சேர்த்து சிட்டிகை இஞ்சி தூள் கலந்து குடித்து வந்தால் அஜீரணம் சரியாகும்.
- ஆடாதோடா இலைச்சாறு 10 மில்லி அளவு எடுத்து தேன் அல்லது சர்க்கரையுடன் சேர்த்து எடுத்து வந்தால் மூக்கில் இரத்தம் வடிவது நிற்கும்.
- வேப்ப மரப்பட்டையை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து கண்களை சுத்தம் செய்யலாம். முருங்கை இலை சாறு மற்றும் தேன் கலந்து கண் சொட்டு மருந்தாக பயன்படுத்தவும்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US