நாளுக்கு சுமார் ரூ 6 கோடி நன்கொடையாக அளித்த பெரும் வள்ளல்... அம்பானி, அதானி அல்ல
இந்தியாவில் வணிக சாம்ராஜியங்களை உருவாக்கி நடத்தும் பல பெரும் கோடீஸ்வரர்கள், சமூக அக்கறை காரணமாக நன்கொடையும் அளித்து வருகின்றனர்.
தமது கடமை
ஆனால் ஒருவர் மட்டும் நன்கொடை அளிப்பதையே தமது கடமையாக செய்து வருகிறார். அவர் ரிலையன்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் முகேஷ் அம்பானியோ கெளதம் அதானியோ அல்ல.
அந்த பெரும் வள்ளல் HCL டெக்னாலஜிஸ் நிறுவனரான ஷிவ் நாடார். 79 வயதான ஷிவ் நாடார் 2024 நிதியாண்டில் மட்டும் ரூ 2,153 கோடி அளவுக்கு நன்கொடை அளித்துள்ளார்.
அதாவது நாளுக்கு சுமார் 5.9 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. மட்டுமின்றி, கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்தியாவின் பெரும் நன்கொடையாளராக தமது நிலையை உறுதி செய்துள்ளார்.
முதலிடத்தில்
ஷிவ் நாடார் அறக்கட்டளை ஊடாகவே நன்கொடைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்வி மற்றும் தொழிநுட்பம் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு அவர் நன்கொடை அளித்து வருகிறார்.
ஷிவ் நாடாரை அடுத்து முகேஷ் அம்பானி குடும்பம் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. 2024 நிதியாண்டில் ரூ 407 கோடி அளவுக்கு நன்கொடைகளை முன்னெடுத்துள்ளனர்.
தனிப்பட்ட முறையில் நன்கொடை அளித்தவர்களை கருத்தில்கொண்டால், அதிலும் ஷிவ் நாடார் முதலிடத்தில் உள்ளார். இதுவரை ரூ 1,992 கோடி நன்கொடையாக அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |