2-அடி நீளம்., பிரித்தானியாவில் பேரழிவை ஏற்படுத்திவரும் ராட்சத எலிகள்., மக்கள் கவலை
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் ராட்சத எலிகளால் நிலைமை மோசமாகி வருகிறது.
இந்த எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு தூய்மையின்மையே காரணம் என நம்பப்படுகிறது.
தூய்மையான நாடுகள் என்றாலே, ஐரோப்பாவும், பிரித்தானியாவும் தான் நினைவுக்கு வரும். ஆனால் இன்று பிரித்தானியா அதன் அசுத்தத்தால் கலக்கமடைந்துள்ளது.
பிரித்தானியா தற்போது எலிகளால் சிரமப்பட்டு வருகிறது. இவை சாதாரண எலிகள் அல்ல, அவற்றின் அளவு சாதாரண எலிகளை விட பாரியது.
2-அடி நீளம் கொண்ட மரபணு மாற்றமடைந்த எலிகள்
பெரும்பாலான எலிகள் 2-அடி நீளம் கொண்டதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென வந்துள்ள இந்த புதிய எலிகள் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குப்பைத் தொட்டிகள் சேகரிப்பதில் ஏற்பட்ட தாமதம்தான் எலிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கக் காரணமாக கருதப்படுகிறது. சுத்தமின்மையால் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த எலிகள் மரபணு மாற்றமடைந்தவை, அவை இப்போது பிரித்தானியாவில் வீடுகளை நோக்கி படையெடுத்துவருகின்றன.
கடந்த 90 நாட்களில் இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்க உதவி தேடுபவர்களின் எண்ணிக்கை 115 சதவீதம் அதிகரித்துள்ளது என்று British Pest Control Association கூறுகிறது.
பிரித்தானியாவில் சுமார் 25 கோடி எலிகள் வாழ்வதாக நம்பப்படுகிறது, இது இங்கிலாந்தின் மக்கள் தொகையான 6.75 கோடியை விட அதிகம். தற்போது குளிர் காரணமாக வீடுகளுக்குள் எலிகள் நுழைய ஆரம்பித்துள்ளது மிகவும் கவலைக்குரிய விடயம்.
எலி பிரச்சனை எவ்வளவு அதிகரித்துள்ளது?
குப்பைத் தொட்டிகள் முழுமையாக நிரம்பியவுடன், மக்கள் குப்பைகளை அதன் ஓரத்தில் வைக்கின்றனர். இது பூச்சிகளுக்கும் எலிகளுக்கும் விருந்து போன்றது.
'எலிகள் தொடர்பான அழைப்புகள் 2021 உடன் ஒப்பிடும்போது 2022ல் 6 சதவீதம் அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டு மூன்று சதவீதமாக இருந்தது.
ஆனால் டிசம்பர் முதல் இதுவரை 235 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இது வழக்கத்தை விட மிக அதிகம். நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் பாரிய எலிகள் காணப்படுவதாக சிலர் தெரிவித்தனர்" என லண்டனைச் சேர்ந்த பூச்சிக் கட்டுப்பாட்டாளர் Paul Bates கூறினார்.

சென்னை நிறுவனம் தயாரித்த உலகின் முதல் உயர் மின்னழுத்த Electric Bike., Tn Global Investors Meetல் அறிமுகம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Super Rats in UK, genetically modified rats streaming into British homes, United Kingdom, Uk giant rats