அகதிகள் தொடர்பில் சுவிஸ் மாகாணம் ஒன்று விடுத்துள்ள நெகிழவைக்கும் கோரிக்கை
ஒரு பக்கம் இஸ்லாமிய நாடுகளே எங்கள் நாட்டுக்குள் ஆப்கானிஸ்தானியர்கள் வரக்கூடாது என்று கூறிக்கொண்டிருக்கும் நிலையில், சுவிஸ் மாகாணம் ஒன்று இன்னும் கூடுதல் ஆப்கன் அகதிகளை சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கவேண்டும் என பெடரல் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட நெகிழவைக்கும் கோரிக்கையை விடுத்துள்ளது ஜெனீவா மாகாணம்தான்!
சுவிட்சர்லாந்து இதுவரை காபூலில் சுவிட்சர்லாந்துக்காக வேலை செய்த 230 ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவந்துள்ளது.
ஆனால், அது போதாது, அபாயத்திலிருக்கும் ஆப்கன் அகதிகள் அதிகமானோரை சுவிட்சர்லாந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என சுவிஸ் அரசுக்கு ஜெனீவா கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், ஆப்கானிஸ்தானில் மனிதநேய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் Doctors Without Borders முதலான அமைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க இருப்பதாகவும் ஜெனீவா தெரிவித்துள்ளது.