சுவிஸ் பள்ளிகளில் பிரான்ஸ் பிள்ளைகளுக்கு இடம் கிடையாது: நீதிமன்றம் செல்லும் பிரச்சினை
பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பில் சுவிஸ் மாகாணமொன்று எடுத்துள்ள முடிவு, நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க உள்ளது.
சுவிஸ் மாகாணமொன்றின் முடிவு
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் சுமார் 2,500 பேர் ஜெனீவா மாகாணத்தில் வாழ்பவர்கள் அல்ல.
உண்மையில், அவர்களில் பெரும்பாலானோர் பிரான்சிலிருந்து வந்து ஜெனீவாவில் படிப்பவர்கள்.
இந்நிலையில், அடுத்த ஆண்டிலிருந்து, ஜெனீவாவுக்கு வெளியே இருந்து வரும் மாணவ மாணவியரை ஜெனீவா பள்ளிகளில் சேர்ப்பதில்லை என ஜெனீவா மாகாண கவுன்சில் முடிவு செய்துள்ளது.
விடயம் என்னவென்றால், தற்போது ஜெனீவாவில் படிக்கும் வேறு இடங்களைச் சேர்ந்த பிள்ளைகள் சுமார் 1,000 பேர், அடுத்த ஆண்டிலிருந்து வேறு பள்ளிகளில் படிக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஜெனீவாவின் இந்த முடிவை எதிர்த்து 48 குடும்பங்கள் அரசியல் சாசன நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளன.
இதற்கிடையில், ஜெனீவாவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் பிள்ளைகளை அடுத்த ஆண்டில் பள்ளிகளில் சேர்க்க பிரான்ஸ் பள்ளிகளில் போதுமான இடம் இருக்காது என்பதால், பிரான்ஸ் கல்வித்துறை அதிகாரிகளும் ஜெனீவாவின் முடிவால் கோபமடைந்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |