தெருக்களில் தூங்குவோரை தேடிப் பிடிக்கும் ஜெனீவா அதிகாரிகள்: ஒரு நல்ல தகவல்
Greater Geneva's emergency shelter network has hit a record 548 year-round beds: கிரேட்டர் ஜெனீவாவின் அவசர கால தங்குமிட அமைப்பு, வீடில்லாத மக்கள் தங்குவதற்காக 548 படுக்கைகளை தயார் செய்துள்ளதாக சுவிஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன
ஜெனீவா சமூக சேவை அதிகாரிகள், தெருக்களில் தூங்குவோரை தேடிப் பிடிக்கிறார்களாம்.
தெருக்களில் தூங்குவோரை...
அதாவது, வீடில்லாமல் தெருக்களில் தூங்குவோரை தேடிப்பிடித்து, அவர்களை அவசர கால தங்குமிடங்களில் தங்க வைக்கிறார்களாம் அதிகாரிகள்.

விடயம் என்னவென்றால், 2016இல் இப்படி வீடற்றவர்கள் தங்குவதற்காக 40 படுக்கைகள்தான் இருந்தனவாம். அந்த எண், கோவிடுக்கு முன் 238 படுக்கைகளாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தற்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில், வீடற்றவர்களுக்காக 548 படுக்கைகள் தயாராக உள்ளன.
அத்துடன், 2027இல் மேலும் படுக்கைகளின் எண்ணிக்கையை 584ஆக அதிகரிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்களாம்.