இந்திய வம்சாவளி இயக்குநருக்கு ஜெனீவா திரைப்பட விழாவில் கௌரவம்
Geneva Film Festival to honour Indian-American filmmaker Mira Nair: இந்திய வம்சாவளியினரான மீரா நாயர், ஜெனீவா திரைப்பட விழாவில் கௌரவிக்கப்பட உள்ளார்.
ஜெனீவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய வம்சாவளி இயக்குநர் ஒருவர் கௌரவிக்கப்பட உள்ளார்.
யார் அவர்?
ஜெனீவா சர்வதேச திரைப்பட விழாவில் Prix Film & Beyond என்னும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற இருக்கும் அந்தப் பெண், இந்திய அமெரிக்க திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான மீரா நாயர்.

மீரா நாயர் இந்தியாவின் ஒரிஸா மாநிலத்தில் பிறந்தவர். அவரது திரைப்படங்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் விடயங்களை மையமாகக் கொண்டவை ஆகும்.
மீரா நாயர் ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளையும், வெனிஸ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளையும் வென்றுள்ளார்.
மீரா நாயரின் மகனான ஸோஹ்ரான் மம்தானிதான் தற்போது நியூயார்க்கின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.