அபராதத்தை செலுத்தமுடியாவிட்டால் சிறை: சுவிஸ் சட்டத்தில் மாற்றம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், அபராதம் விதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தமுடியாவிட்டால், அவர்களை சிறையிலடைக்கும் வழக்கம் இருந்துவந்தது.
சுவிஸ் சட்டத்தில் மாற்றம்
இந்நிலையில், அபராதம் செலுத்தமுடியாதவர்களை சிறையிலடைக்கும் வழக்கத்தை ஜெனீவா நாடாளுமன்றம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

அபராதம் செலுத்தமுடியாதவர்களை சிறையிலடைக்கும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான மசோதா, ஜெனீவா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.
அபராதம் செலுத்தமுடியாதவர்களை, குற்றவாளிகளுடன் சிறையில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த அமைப்பினர் நாடாளுமன்றத்தின் முடிவை வரவேற்றுள்ளனர்.
ஆக, இனி அபராதம் செலுத்தமுடியாதவர்கள் சிறையிலடைக்கப்படமாட்டார்கள். மாறாக, அவர்களுக்கு சமுதாய சேவை, மின்னணுப்பட்டை அணிவிப்பு போன்ற தண்டனைகள் கொடுக்கப்படுவது தொடர்பில் திட்டமிடப்பட்டுவருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |