சுவிட்சர்லாந்தின் இந்த பகுதியில்தான் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் அதிகம் வாழ்கிறார்களாம்
சுவிட்சர்லாந்தில், ஜெனீவா மாகாணத்தில்தான் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் அதிகம் வாழ்கிறார்கள்.
பெடரல் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்
சுவிஸ் பெடரல் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜெனீவாவில்தான் அதிகபட்சமாக 48 சதவிகிதம் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் வாழ்கிறார்கள்.
Obwalden மாகாணத்தில் வெறும் 5.6 சதவிகிதத்தினர்தான் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள்.
எந்த நாட்டவர்கள் அதிக அளவில் சுவிஸ் குடியுரிமையும் வைத்துள்ளார்கள்?
அதிகபட்சமாக, இத்தாலி நாட்டவர்கள்தான் இத்தாலி பாஸ்போர்ட்டும், சுவிஸ் பாஸ்போர்ட்டும் வைத்துள்ளார்கள்.
அவர்களுக்கு அடுத்தபடியாக, பிரான்ஸ் நாட்டவர்கள், அவர்களைத் தொடர்ந்து ஜேர்மன் நாட்டவர்கள் அதிக அளவில் சுவிஸ் குடியுரிமையும் வைத்துள்ளார்கள்.
இதுபோக, போர்ச்சுக்கீசியர்கள் மற்றும் துருக்கி நாட்டவர்களும் சுவிஸ் குடியுரிமையுடனான இரட்டைக்குடியுரிமை வைத்துள்ளார்கள்.
image -Pixabay