சுவிட்சர்லாந்தில் சில அறுவை சிகிச்சைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்: மருத்துவ ஊழியர்கள் எச்சரிக்கையின் பின்னணி
சுவிஸ் மாகாணமான ஜெனீவாவிலுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்க இரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இரத்த தானம் செய்ய முன்வருமாறு ஜெனீவா மருத்துவமனைகள் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
ஜெனீவா மாகாணத்திற்கு மாதம் ஒன்றிற்கு 1,000 பேர் இரத்ததானம் செய்ய தேவைப்படும் நிலையில், ஜூன் மாதத்தில் 800 பேர் மட்டுமே இரத்த தானம் செய்துள்ளார்கள்.
சரியாக அந்த நேரத்தில் வழக்கத்தை விட இரத்தத்திற்கு கடுமையான தேவை வேறு ஏற்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என்றே கணிக்க முடியாத ஒரு கொரோனா சூழலுடன் கோடை விடுமுறையின் துவக்கமும் சேர்ந்துகொள்ள, இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்நிலையில், இரத்த தானம் செய்வோர் தானம் செய்ய வர முன்வராவிட்டால், சில அத்தியாவசியமற்றவை என கருதப்படும் அறுவை சிகிச்சைகளை நிறுத்தவேண்டிவரும் என மருத்துவமனை ஊழியர்கள் எச்சரித்துள்ளார்கள்.