ஆவி நகரம் போல காட்சியளிக்கும் ஜெனீவா: பரபரப்பாகும் சுவிட்சர்லாந்து
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் சந்திக்கும் உச்சி மாநாடு ஜெனீவாவில் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து பரபரப்படைந்து வருகிறது. இம்மாதம் (ஜூன்) 16ஆம் திகதி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் ஜெனீவாவில் சந்தித்துப் பேச உள்ளார்கள்.
அதையொட்டி அதிகாரிகள் ஜெனீவாவின் சில பகுதிகளை காலி செய்து வருவதால், ஜெனீவா ஆவி நகரம் போல காணப்படுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிபர்கள் இருவரும் சந்தித்துப்பேச இருக்கும் 18ஆம் நூற்றாண்டு கால கட்டிடமான
Villa La Grange, மற்றும் அதற்கு அருகிலுள்ள கட்டிடங்களைச் சுற்றி பொலிசார்
பாதுகாப்புக்காக தற்காலிக வேலி அமைத்துள்ளார்கள்.
அந்த பகுதியில் ஜூன் 17 வரை வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.