முழு நீள நீச்சலுடைகளுக்கு தடை விதிக்கும் சட்டம்: ஜெனிவா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
முழு நீள நீச்சல் உடைகள் மீதான தடைக்கு ஜெனிவா நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
முழு நீள நீச்சலுடைகளுக்கு தடை
பொது இடங்களில் உள்ள நீர்நிலைகளில் முழு அளவிலான நீச்சல் உடைகளுக்கு தடை விதிக்கும் சட்டத்தை ஸ்விட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கிராண்ட் கவுன்சிலால் கடந்த மார்ச் மாதம் அங்கீகரித்து இருந்தது.
மேலும் இந்த சட்டம் மே 30ம் திகதி முதல் அமுலுக்கு வந்த நிலையில் , இந்த சட்டத்தின் பிரிவு 5ன் கீழ் முழங்காலுக்கு கீழே உள்ள கால்களையும், தோள்களுக்கு கீழே உள்ள கைகளையும் முழுமையாக மறைக்கும் நீச்சல் ஆடைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்கள் அணியும் புர்கினி வகையிலான நீச்சல் உடைகளை குறிவைத்தே இந்த சட்டம் முன்மொழியப்பட்டது. பின்னர் மருத்துவ காரணங்கள் அல்லது சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கப்படும் ஆடைகளுக்கும் இந்த தடை விரிவாக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்திற்கு எதிர்ப்புகள் உடனடியாக கிளம்பின.
மேலும் இந்த தடை சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் அதிகாரப்பூர்வமான வழக்குகளையும் தொடர்ந்தனர்.
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இந்நிலையில் ஜெனீவா நகரின் பொது நீர் நிலையங்களில் முழு அளவிலான நீச்சல் ஆடைகளை பயன்படுத்த தடை விதித்த சட்டத்திற்கு ஜெனிவா நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் இறுதித் தீர்ப்பு வரும் வரை ஜெனீவா நகரின் பொது நீர் நிலையங்களில் முழு அளவிலான நீச்சல் ஆடைகளை பயன்படுத்த எந்தவொரு தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தடைச் சட்டம் மத சுதந்திரம், தனிநபர் விருப்பம், கண்ணியம் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றை கேள்வி எழுப்புவதாக உள்ளது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |