ஜனவரி 1 முதல்... குறைந்தபட்ச ஊதியம் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள சுவிஸ் மாகாணம் ஒன்று
2023ஆம் ஆண்டில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க இருப்பதாக ஜெனீவா மாகாணம் அறிவித்துள்ளது.
ஜனவரி 1ஆம் திகதி இந்த குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பு அமுலுக்கு வருகிறது.
சட்டப்படி, குறைந்தபட்ச ஊதியம், அதாவது ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு ஊதியம் என்பது, ஆண்டுதோறும் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும்.
அதன்படிதான் ஜெனீவா மாகாணம் 2021இல் ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியத்தை, 23.27 சுவிஸ் ஃப்ராங்குகளாக அதிகரித்தது.
2023இல், அது ஒரு மணி நேரத்திற்கு 24 சுவிஸ் ஃப்ராங்குகளாக அதிகரிக்க உள்ளது.
ஜெனீவா மாகாணம், 2020 செப்டம்பரில் குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகம் செய்தது. அப்போது, அதுதான் உலகிலேயே உயர்ந்த அதிகபட்ச ஊதியம் என வெளிநாட்டு ஊடகங்கள் பாராட்டியிருந்தன.
செய்தித்தாள்களில் பார்ப்பதற்கு அது நன்றாக இருந்தாலும், உண்மையில், ஒரு மாதத்திற்கு 4,000 ஃப்ராங்குகள் என்பது, அதுவும், உலகின் விலைவாசி அதிகமான நகரங்களில் ஒன்றான ஜெனீவாவில் போதுமான ஊதியமாக இல்லை என்பதுதான் நிதர்சனம் என்பது குறிப்பிடத்தக்கது.