சில சுவிஸ் மருத்துவமனைகளில் தொழில்நுட்பக் கோளாறு: அவசர அனுமதிகள் பாதிப்பு
Geneva University Hospitals were hit by a computer failure yesterday morning சுவிஸ் மருத்துவமனைகள் சிலவற்றில் நேற்று ஏற்பட்ட கணினி பிரச்சினை காரணமாக, சிறிது நேரத்துக்கு அவசர அனுமதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
ஜெனீவா பல்கலை மருத்துவமனைகளில் நேற்று காலை திடீரென கணினிகள் செயலிழந்தன.
அவசர அனுமதிகள் பாதிப்பு
கணினி பிரச்சினையால், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்த சில நோயாளிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

உயிருக்கு ஆபத்து இல்லை என தெரியவந்த நோயாளிகள் மட்டும் திருப்பி அனுப்பப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கணினி செயலிழப்பு 30 முதல் 45 நிமிடம் வரை நீடித்ததாக தெரிவித்துள்ள மருத்துவமனைகள், அது ஒரு தொழில்நுட்பக் கோளாறுதான் என்றும், அது சைபர் தாக்குதல் அல்ல என்றும் தெரிவித்துள்ளன.
அத்துடன், கணினி பிரச்சினையால் மருத்துவ ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அறுவை சிகிச்சை முதலான எந்த விடயங்களும் பாதிக்கப்படவில்லை என்றும் மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.