பைடன்-புடின் சந்திப்பு எவ்வளவு நேரம் நடைபெறும்... என்னென்ன முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடக்கும்: வெளியான முழு விபரம்
ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் எதைப்பற்றி கலந்துரையாட உள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிஸ் ஜெனீவா நகரத்தின் மிகப்பெரிய பூங்காவில் உளள் எரிக்கு அருகிலுள்ள Villa La Grange-ல் பைடன்-புடின் ஆகியோர் சந்திக்கின்றனர்.
இந்த பேச்சுவார்த்தை 3 கட்டமாக இடைவெளியுடன் சுமார் 5 மணிநேரம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சந்திப்பை தொடர்ந்து முதலில் புடின் தனியாக செய்தியாளர்களை சந்திப்பார். அவரை தொடர்ந்து பைடன் தனியாக செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.
இருவரும் ஒன்றாக செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் கிரைம், காலநிலை மாற்றம் மற்றும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் என பல விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு, சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான், கொரிய தீபகற்பத்தின் நிலைமை, ஈரானிய அணுசக்தி திட்டம் குறித்து ஜனாதிபதிகள் கலந்துரையாடுவார்கள்.
பேச்சுவார்த்தையில் Nagorno-Karabakh மற்றும் பெலாரஸ் குறித்து சிறப்பு கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.