12 வயதில் சொந்தமாக நிறுவனம்... 60 நாடுகளில் கவனம் ஈர்த்த தயாரிப்பு: அசத்திய சென்னை சகோதரர்கள்
சென்னையை சேர்ந்த சகோதரர்கள் இருவர் உருவாக்கிய 7 மொபைல் செயலிகள் 60 நாடுகளில் கவனம் ஈர்த்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தியும் வருகின்றனர்.
இளம் வயதிலேயே நிறுவனம்
பொதுவாக சிறுவர்கள்கள் பள்ளியில் அதிக மதிப்பெண் பெறுவதில் கவனம் செலுத்துவார்கள் அல்லது நண்பர்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் 6 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர், அந்த இளம் வயதிலேயே நிறுவனம் ஒன்றை சொந்தமாக தொடங்கியுள்ளனர்.
சென்னையை சேர்ந்த ஷ்ரவன் மற்றும் சஞ்சய் குமரன் ஆகிய சகோதரர்கள் இருவரும் 30 வயதுக்கு உட்பட்ட 30 பேர்கள் கொண்ட மொபைல் செயலி உருவாக்குவோர் பட்டியலில் இடம்பெற்றவர்கள்.
கடந்த 2011ல் வெறும் 10 மற்றும் 12 வயதேயான ஷ்ரவன் மற்றும் சஞ்சய் இணைந்து GoDimensions என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளனர். சஞ்சய் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட ஷ்ரவன் தலைவராக பொறுப்புக்கு வந்தார்.
அடுத்த சில வருடங்களில் சகோதரர்கள் இருவரும் 7 மொபைல் செயலிகளை உருவாக்கியதுடன், 60 நாடுகளில் அந்த செயலிகள் கவனம் ஈர்த்துள்ளது, அத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் அந்த செயலிகளை பயன்படுத்தவும் தொடங்கினர்.
70,000 பேர் தரவிறக்கம்
மட்டுமின்றி 70,000 பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். அந்த இளம் வயதிலேயே இவர்கள் உருவாக்கிய goDonate என்ற செயலி தனிக்கவனம் பெற்றது. மேலும் சிறார்களுக்கான விளையாட்டு செயலிகள் பல உருவாக்கியுள்ள இந்த சகோதரர்கள் சோதனைக்காக மட்டும் 150 செயலிகளை உருவாக்கியுள்ளனர்.
பள்ளி காலம் முடித்து தங்கள் பட்டப்படிப்பை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள A&M பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள Salesforce நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக ஷ்ரவன் பணியாற்றி வருகிறார்.
சஞ்சய் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் பயிற்சி கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |