காஸா போர்... ஜேர்மனி இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறியதா: தீர்ப்பளிக்கும் ஐ.நா உயர்நீதிமன்றம்

Palestine Israel-Hamas War Gaza
By Arbin Apr 30, 2024 07:20 AM GMT
Report

காஸா போர் தொடர்பில் ஜேர்மனிக்கு எதிராக மத்திய அமெரிக்க நாடான நிகராகுவா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீர்ப்பளிக்க உள்ளது.

ஆயுதங்களை வழங்கி வருகிறது

ஜேர்மனி 1948 இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேலுக்கு காஸா போருக்காக ஆயுதங்களை வழங்கி வருகிறது என்றே நிகராகுவா குற்றஞ்சாட்டியுள்ளது.

காஸா போர்... ஜேர்மனி இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறியதா: தீர்ப்பளிக்கும் ஐ.நா உயர்நீதிமன்றம் | Genocide Case Over Gaza Un Court To Rule

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் பிற உதவிகளை வழங்குவதை ஜேர்மனி நிறுத்த வேண்டும் என்பதை உறுதி செய்யும் பொருட்டு நிகராகுவா சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்த வழக்கில் நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்க உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் அதிகார வரம்பில் அமெரிக்கா இல்லை என்பதை உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே நிகராகுவா ஜேர்மனி மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

மட்டுமின்றி, இஸ்ரேலும் 1948 இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக நிகராகுவா குற்றஞ்சாட்டியுள்ளது. இனப்படுகொலை ஒப்பந்தம் மீறியது தொடர்பில் நிகராகுவா மற்றும் ஜேர்மனியின் சட்டத்தரணிகள் தரப்பு இந்த மாத தொடக்கத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

5 அவசர கோரிக்கைகள்

நிகராகுவா தெரிவிக்கையில், ஒருபக்கம் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதும், மறுபக்கம் காஸா மக்களுக்கு உதவி செய்வதுமாக பரிதாபகரமான நிலையில் ஜேர்மனி உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

காஸா போர்... ஜேர்மனி இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறியதா: தீர்ப்பளிக்கும் ஐ.நா உயர்நீதிமன்றம் | Genocide Case Over Gaza Un Court To Rule

ஆனால் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதாக ஜேர்மனி பதிலளித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆயுத உதவி அளிப்பதை ஜேர்மனி உடனடியாக நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 5 அவசர கோரிக்கைகளை நிகராகுவா முன்வைத்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் கட்டுப்படக் கூடியது என்றாலும், அதை நிறைவேற்றும் அதிகாரம் அந்த நீதிமன்றத்திற்கு இல்லை என்றே கூறப்படுகிறது.

உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா உடனடியாக கைவிட வேண்டும் என்று இதே சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் அது வெறும் தீர்ப்பாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US