ரொனால்டோவுக்கும் அவர் காதலிக்கும் இடையிலான உறவில் விரிசல்? வெளிவந்த தகவல்
ரொனால்டோவுக்கும் அவரின் காதலி Georgina Rodriguezவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாக தொடர்ந்து தகவல் பரவிய நிலையில் அதற்கு நட்சத்திர ஜோடி முற்றுபுள்ளி வைத்துள்ளனர்.
ரொனால்டோ - Georgina Rodriguez ஜோடி
கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ - Georgina Rodriguez ஜோடி 2016ல் இருந்து சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது தான் என ஒரு தகவல் பரவி வருகிறது.
மேலும் இந்த ஜோடிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் இருவரும் பிரிந்துவிடுவார்களா எனவும் சமூகவலைதளங்களில் விவாதம் எழுந்தது. இதற்கு அவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
SERGEI SUPINSKY/AFP/Getty Images
என் வாழ்க்கையின் காதலை...
அதன்படி Georginaன் சமூகவலைதள தெரிவிக்கையில், 22 வயதில் நான் என் வாழ்க்கையின் காதலை (ரொனால்டோவை) சந்தித்தேன், அனுபவிக்க இன்னும் பல அழகான விஷயங்கள் உள்ளன என பதிவிட்டுள்ளார்.