விமானத்தில் கொசுவால் ஜேர்மனி ஊழியர் உயிரிழப்பு: ஐவர் மருத்துவமனையில் அனுமதி
German airport worker dies after mosquito bite: விமானம் மூலம் வந்த கொசுவால் பாதிக்கப்பட்ட ஜேர்மனி விமான ஊழியர் உயிரிழந்தார்.
ஜேர்மனியில் கொசுவால் பாதிக்கப்பட்ட விமான ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான ஊழியர்
ஜேர்மனியில் விமானத்தில் சிக்கி வந்ததாகக் கருதப்படும் கொசுவால் விமான ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டார்.
அரிதான மலேரியா பரவல் சூழலில், குறித்த ஊழியர் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டதாக 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பிராங்பேர்ட் விமான நிலைய வளாகத்தைச் சுற்றி கொசுக்களைப் பிடிக்கும் பொறிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை எங்கிருந்து வந்தன என்பதை அறிய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக
ஜேர்மனியின் பரபரப்பான இந்த விமான நிலையத்தில் ஜூலை மாதத்தில் 4 ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து Robert Koch Institute என்ற நோய்க் கட்டுப்பாடு மற்றும் பொது சுகாதாரத்திற்கான ஜேர்மன் கூட்டாட்சி அரசு நிறுவனம், விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட Anopheles வகை கொசுவே இதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |