பொறுப்பேற்ற சில நாட்களிலே சீனாவுக்கான ஜேர்மன் தூதர் திடீர் மரணம்! எப்படி?
சீனாவுக்கான ஜேர்மன் தூதராக பொறுப்பேற்ற அதிகாரி சில நாட்களிலே மரணமடைந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜான் ஹெக்கர் என்ற அதிகாரியே மரணமடைந்துள்ளார். அவரது மறைவை ஜேர்மனி வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சீனாவுக்கான ஐரோப்பிய நாட்டின் தூதராக பணியாற்றும் ஜான் ஹெக்கர், அந்தப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே இறந்துவிட்டார் என ஜேர்மனி வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவுக்கான ஜேர்மன் தூதரின் திடீர் மரணம் குறித்து நாங்கள் வருத்தமடைந்தோம், அவரது குடும்பத்தினருக்கும், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கு எங்களின் ஆழந்த இரங்கல் என ஜேர்மன் வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜான் ஹெக்கர் இறப்புக்கான காரணத்தை அதிகாரிகள் குறிப்பிடவில்லை.
54 வயதான ஜான், அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகராக பணியாற்றினார். ஆகஸ்ட் இறுதியில் ஹெக்கர் தூதராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.