சீன ஜனாதிபதியை சந்தித்தார் ஜேர்மன் சேன்ஸலர்: எழுந்துள்ள விமர்சனம்...
இன்று சீனாவுக்குச் சென்றுள்ள ஜேர்மன் சேன்சலர் சீன ஜனாதிபதியை சந்தித்தார்.
சந்திப்பின் பின்னணியில் இருக்கும் முக்கிய விடயம் வர்த்தகம்.
சீனாவுக்குச் சென்றுள்ள ஜேர்மன் சேன்சலரான ஓலாஃப் ஷோல்ஸ், சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.
சீனாவின் சர்வாதிகாரப் போக்கு கடும் கண்டனங்களை எதிர்கொண்டுவரும் நிலையில் ஜேர்மன் சேன்சலர் சீனா சென்றுள்ள விடயம் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான தொழில்துறையினருடன் ஷோல்ஸ் சீனா சென்றுள்ளதன் நோக்கம், சீனாவுடன் வர்த்தக உறவுகளை அதிகரிப்பதாகும்.
ஆற்றலுக்காக ஜேர்மனி பெருமளவில் ரஷ்யாவை சார்ந்திருப்பதால் அது சந்தித்த பிரச்சினைகளையும், அதாவது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கு பழிக்குப் பழியாக ரஷ்யா எரிவாயு வழங்கலை துண்டித்த விடயத்தையும் இப்போது மீண்டும் உலக நாடுகள் நினைவுகூருகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் சீனாவுக்குச் சென்றுள்ள முதல் G7 நாடுகளின் தலைவர் ஷோல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
Kay Nietfeld/pool/AP