எதிர் காலத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்: ஜேர்மன் ஜனாதிபதி ஒலாப் மக்களிடம் உரை
ஜேர்மனியை முன் நகர்த்தி செல்ல அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும் என்று ஜேர்மன் ஜனாதிபதி ஒலாப் ஸ்கோலஸ் தனது நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு உரை
உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஜேர்மன் ஜனாதிபதி ஒலாப் ஸ்கோலஸ் தன்னுடைய நாட்டு மக்களிடம் புத்தாண்டு உரையை ஆற்றியுள்ளார்.
அதில் பல்வேறு வகையான துன்பங்கள், இரத்த சேதங்கள் என உலகம் முன்பை விட வாழ்வதற்கு மிகவும் மோசமான இடமாக மாறியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர், எரிபொருள் விலை அதிகரிப்பு, இஸ்ரேல்-ஹமாஸ் போர் என உலக மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
ஆனால் ஜேர்மனியர்கள் இவை அனைத்தையும் வெற்றிகரமாக கடந்துள்ளனர். ஜேர்மனியில் விலைவாசி குறைந்துள்ளது, சம்பளம் மற்றும் பென்சன் மதிப்பு அதிகரித்துள்ளது, எரிபொருள் கையிருப்பு அதிகரித்துள்ளது, வரிவிதிப்பு குறைந்துள்ளது.
போக்குவரத்து மற்றும் பசுமை எரிசக்தியில் அரசு சிறப்பாக முதலீடு செய்துள்ளது என்று தனது உரையில் ஒலாப் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியை முன்நகர்த்தி செல்ல அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும்.
ஐரோப்பியர்கள் மட்டுமில்லாமல் அனைத்து உலக நாடுகளும் நம்மிடம் இதை தான் எதிர்பார்கிறார்கள் எனவே எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் என ஜேர்மன் ஜனாதிபதி ஒலாப் ஸ்கோலஸ் தனது நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |