இந்தியாவுக்கு அரசு முறைப்பயணமாக செல்லும் ஜேர்மன் சேன்ஸலர்
ஜேர்மன் சேன்சலர், இந்திய ஜேர்மனி அரசுகளுக்கிடையிலான ஆலோசனை மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இந்தியா செல்கிறார்.
இந்தியாவுக்கு செல்லும் ஜேர்மன் சேன்ஸலர்
இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக இந்தியா செல்லும் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்த இருக்கிறார்.
Image: REUTERS
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, திறமையுடையோருக்கான அதிக அளவிலான வாய்ப்புகள், மூலோபாய தொழில்நுட்பங்களில் பசுமை மற்றும் நிலைக்கும் மேம்பாட்டு கூட்டுறவு முதலான விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளின் தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜேர்மன் வர்த்தகங்களின் ஆசியா பசிபிக் மாநாடும் இன்று துவங்க உள்ளது. அதற்காக ஜேர்மன் பொருளாதார அமைச்சரான Robert Habeckம் இந்தியா செல்கிறார்.
Early morning arrival in India: Germany‘s Minister of Labour Hubertus Heil has come to Delhi ahead of the Chancellor to scout young Indian talents. Work migration and mobility between India and Germany are high on the agenda of upcoming government consultations. pic.twitter.com/lBT6nLYoPp
— Sandra Petersmann (@PetersmannS) October 24, 2024
அவருடன், தொழிலாளர் துறை அமைச்சரான Hubertus Heilம் செல்ல உள்ள நிலையில், ஜேர்மனியில் மூன்று ஆண்டுகள் இளம் இந்தியர்களுக்கான தொழிற்பயிற்சி ஒன்றிற்காக தயாராகும் புதுடில்லியில் உள்ள பள்ளி ஒன்றை சந்திக்க இருக்கிறார் Heil.
வெள்ளிக்கிழமை ஜேர்மன் சேன்ஸலர் ஷோல்ஸும் இந்திய பிரதமர் மோடியும் 7ஆவது அரசுகளுக்கிடையிலான ஆலோசனை மாநாட்டில் உரையாற்ற இருக்கின்றார்கள்.
அந்த மாநாட்டில் ஜேர்மனி, இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 650 முன்னணி வணிகத் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு ஜேர்மனி மற்றும் இந்தியாவுக்கிடையிலான உறவுகளில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |