ஜேர்மன் நிரந்தரக் குடியிருப்பு அனுமதியா அல்லது ஜேர்மன் குடியுரிமையா? வெளிநாட்டவர்களின் அடுத்த ஆசை
ஜேர்மனி, வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்குவதற்காக, தீவிரமாக பல நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், நிரந்தர குடியிருப்பு அனுமதியைப் பெற்ற வெளிநாட்டவர்கள் பலர், ஜேர்மன் குடிமகனாக ஆகிவிடலாமா என்று யோசிக்கத் துவங்கியுள்ளார்கள்.
அதற்கான 8 காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன...
1. ஒருமுறை ஜேர்மன் குடிமகனாகிவிட்டால், இனி எப்போதுமே ஜேர்மன் குடிமகன்தான்
ஒருமுறை நீங்கள் ஒரு ஜேர்மன் குடிமகனாக மாறிவிட்டால், அதற்குப் பிறகு நீங்கள் நிரந்தரமாக ஜேர்மன் குடிமகன்தான். நீங்கள் வேறொரு நாட்டின் குடிமகனாக ஆக விரும்பி உங்கள் ஜேர்மன் குடியுரிமையை நீங்களாக துறந்தால் மட்டுமே நீங்கள் உங்கள் ஜேர்மன் குடியுரிமையை இழப்பீர்கள்.
நீங்கள் ஜேர்மனியில் 15 வருடங்களுக்கும் மேலாக வசித்தவராக இருந்தாலும் சரி, ஜேர்மானியர் ஒருவரைத் திருமணம் செய்தவராக இருந்தாலும் சரி, 18 வயதுக்குட்பட்ட ஜேர்மன் குழந்தையை வைத்திருந்தாலும் சரி, குடியிருப்பு அனுமதி பெற்றவராக இருந்தாலும்கூட, நீங்கள் வெளிநாடு சென்றுவிட்டு ஜேர்மனிக்குள் நுழையும்போது மீண்டும் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டியிருக்கும்.
அதுவே நீங்கள் ஒரு ஜேர்மன் குடிமகனாக மாறிவிட்டால், அதெல்லாம் தேவையில்லை.
2. வாக்களிக்கும் உரிமை
ஜேர்மனியில் வாழும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்களுக்கு உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை இருந்தாலும், ஜேர்மன் குடிமக்கள் மட்டுமே பெடரல் அல்லது மாகாணத் தேர்தல்களில் வாக்களிக்க முடியும்.
3. அனைத்து தொழில்களும் செய்ய அனுமதி
ஜேர்மனியில், ஜேர்மன் குடிமக்கள் மட்டுமே செய்யக்கூடிய சில வேலைகள் உள்ளன. நீங்கள் உள்ளூர் அரசு அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்று ஆசை வைத்திருந்தால், ஜேர்மன் குடியுரிமையைப் பெற்றிருந்தால் மட்டுமே அந்த வேலை உங்களுக்குக் கிடைக்கும்.
ஜேர்மன் அரசியலில் தலையிட விரும்பினாலும் அப்படித்தான்.
4. ஐரோப்பிய ஒன்றிய குடிமகனின் உரிமைகள்
ஜேர்மன் குடிமகனாக மாறியதும், நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமகனாகவும் ஆகிவிடுவீர்கள். நீங்கள் பிறந்த நாடு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்தால், அது ஒரு பெரிய பிளஸ் பாயிண்டாக இருக்கலாம், ஏனெனில் ஐரோப்பிய ஒன்றிய குடிமகனாக இருப்பதன் மூலம் நீங்கள் வேறு எந்த ஐரோப்பிய நாட்டிலும் வாழ, வேலை செய்ய மற்றும் படிக்க உங்களுக்கு உரிமை உள்ளது.
5. மற்ற நாடுகளுக்கு எளிதான பயணம்
ஜேர்மன் பாஸ்போர்ட் வைத்திருப்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் வேலை செய்வதையும் பயணத்தையும் எளிதாக்குவதுடன், மற்ற நாடுகளுக்கான பயணத்தையும் எளிதாக்கும்.
நீங்கள் ஜேர்மன் குடிமகனாக இல்லாவிட்டால், நீங்கள் பிறந்த நாடு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்தால், அமெரிக்கா போன்ற சில நாடுகளுக்குப் பயணம் செய்தால், விமானம் புறப்படுவதற்கு முன் உங்களுக்கு விசா கிடைத்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால் ஜேர்மன் குடிமக்கள் 190 நாடுகள் அல்லது பிரதேசங்களுக்குச் செல்லலாம், அவர்களுக்கு விசா தேவையில்லை. அல்லது அவர்கள் அந்த நாட்டுக்குள் நுழைந்தவுடன் விசா பெற்றுக்கொள்ளலாம்.
6. உங்கள் குழந்தைகள் ஜேர்மனிக்கு வெளியே பிறந்தாலும், ஜேர்மன் குடிமக்களாக மாறுவார்கள்
நீங்கள் ஜேர்மனியில் நிரந்தர அடிப்படையில் குறைந்தது எட்டு வருடங்கள் வாழ்ந்திருந்தால், ஜேர்மனியில் பிறக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு ஜேர்மன் குடியுரிமை கிடைக்கும். ஆனால், அவர்கள் ஜேர்மனிக்கு வெளியே பிறந்திருந்தால் இந்த விதி அவர்களுக்குப் பொருந்தாது.
ஆனால், குறைந்தது பெற்றோரில் ஒருவராவது ஜேர்மன் குடிமகனாக இருக்கும் பட்சத்தில், உங்கள் குழந்தைகள் உலகில் எங்கு பிறந்தாலும் தானாகவே ஜேர்மன் பாஸ்போர்ட்டுக்கு தகுதி பெறுவார்கள்.
7. எளிதாக கடன் பெறலாம்
பல வங்கி நிறுவனங்களில், பெரும் தொகை கடனாக பெறுவதற்கு, நீங்கள் ஒரு ஜேர்மன் குடிமகனாக இருப்பது அவசியமாகும். குறிப்பாக வீடு கட்டுவதற்கு நீங்கள் கடன் பெற விரும்பினால். நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கும் கடன் கிடைக்கும் என்றாலும், கடன் பெறுவதற்கு, நீங்கள் ஜேர்மன் பாஸ்போர்ட் வைத்திருப்பவராக இருக்க வேண்டும் என்று பல வங்கி நிறுவனங்கள் நிபந்தனை விதிக்கின்றன.
8. ஜேர்மானியர் என்னும் பெருமித உணர்வு
எல்லாவற்றிற்கும் மேல், நிரந்தர குடியிருப்பு அனுமதி பெறுவது ஜனநாயக ரீதியில் சாதனையாகவே இருந்தாலும், அதை, அதிகாரப்பூர்வமாக ஜேர்மானியராக மாறுவதுடன், அதாவது, ஜேர்மானியர் என்ற பெருமித உணர்வுடன் ஒப்பிட முடியாது என்றே கூறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |