ரஷ்யா மீதான தடைகளை நீக்குவதற்கு ஜேர்மனியின் ஒரு தரப்பு ஆதரவு
ஜேர்மனியில் விரைவில் புதிய அரசு ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அரசில் பங்கேற்க இருக்கும் ஒரு கட்சி, ரஷ்ய ஆற்றல் மீதான தடைகளை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீதான தடைகளை நீக்குவதற்கு ஆதரவு
ஜேர்மனியில் பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியும், சோஷியல் டெமாக்ரட்ஸ் கட்சியும் இணைந்த கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில், கூட்டணியிலுள்ள சோஷியல் டெமாக்ரட்ஸ் கட்சி, ரஷ்ய ஆற்றல் மீதான தடைகளை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜேர்மனி தனது எண்ணெய் தேவைகளுக்காக ரஷ்யாவை பெருமளவில் நம்பியிருந்தது அனைவரும் அறிந்த விடயம்தான்.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட, ஐரோப்பிய நாடு என்னும் முறையில் உக்ரைனுக்கு ஆதரவும், ரஷ்யாவை எதிர்ப்பும் காட்டவேண்டிய நிலை ஜேர்மனிக்கு ஏற்பட்டது.
Felipe Trueba/EPA-EFE
அதைத் தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் வாங்குவதில் பிரச்சினை ஏற்பட, அது ஜேர்மனியின் மின் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
விடயம் என்னவென்றால், இப்போது அமெரிக்காவைப் போலவே தங்கள் நாட்டுக்கு தாங்கள் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற எண்ணம் பல நாடுகளுக்கு உருவாகி வருகிறது.
உதாரணமாக, உக்ரைனுக்கு நாங்கள் ஏன் எங்கள் படைவீரர்களை அனுபவேண்டும் என இத்தாலி பிரதமர் கேள்வி எழுப்பியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், கிட்டத்தட்ட அதேபோன்றதொரு மன நிலைமையில் ஜேர்மன் கட்சிகள் சில இருப்பது தெரியவந்துள்ளது.
ஆம், உக்ரைனை ஊடுருவியதால் ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டன. அதனால் ஜேர்மனிக்கு எண்ணெய் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஆக, ரஷ்யா மீதான தடைகளை நீக்கிவிட்டால் எண்ணெய் கிடைப்பதில் பிரச்சினை இருக்காதே!
இதற்கிடையில், ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது.
ரஷ்யா மீதான தடைகளை நீக்கவேண்டும், குறிப்பாக, ரஷ்ய ஆற்றல் தொடர்பிலான தடைகளை நீக்கவேண்டும் என்ற பேச்சு அமெரிக்காவில் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்நிலையில்தான், ஜேர்மனியில் அடுத்து ஆட்சி அமைக்கவிருக்கும் கட்சிகளில் ஒன்றான சோஷியல் டெமாக்ரட்ஸ் கட்சியும், ரஷ்ய ஆற்றல் மீதான தடைகளை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
அக்கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான Nina Scheer என்பவர், அமெரிக்கா ரஷ்ய ஆற்றல் மீது விதித்துள்ள தடையை நீக்குவது சவதேச விதிகளுக்குட்பட்டதுதான் என்று கூறியுள்ளார்.
அப்படி தடைகளை நீக்குவது, உக்ரைன் ரஷ்ய போர் விடயத்தில் தூதரக ரீதியில் அமைதியை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இப்படி ஜேர்மனி, ரஷ்ய தடைகளை நீக்குவது குறித்து பேசுவதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.
ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு பால்டிக் கடல் வழியாக குழாய் மூலம் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொண்டுவரும் ஒரு திட்டம் Nord Stream 2 AG என்னும் திட்டமாகும்.
அமெரிக்காவின் தடைகளைத் தொடர்ந்து ஜேர்மனி அத்திட்டத்தை நிறுத்தியது. ஆனால், அது ஜேர்மனிக்கே பாதகமாக அமைந்துவிட்டது.
ஆகவேதான் இப்போது ரஷ்ய ஆற்றல் மீதான தடைகளை நீக்குவது குறித்து ஜேர்மன் தரப்பிலிருந்து குரல் ஒலிக்கத் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.