குழந்தைக்காக அகதிகள் இருவர் கொலை: ஜேர்மனியில் பயங்கரம்
தங்களுக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக, அகதிகளாக வந்த ஒரு பெண்ணையும் அவரது தாயையும் கொன்றுள்ளார்கள் ஒரு ஜேர்மன் தம்பதியர்.
குழந்தைக்காக அகதிகள் இருவர் கொலை
தென்மேற்கு ஜேர்மனியிலுள்ள Wiesloch என்னுமிடத்தில் அமைந்துள்ள அகதிகள் காப்பகம் ஒன்றில், உக்ரைனிலிருந்து அகதியாக வந்த ஒரு 27 வயது பெண்ணும், 51 வயதான அவரது தாயும் தங்கியிருந்துள்ளார்கள்.
அப்போது, உக்ரைன் அகதிகளுக்கு உதவும் சமூக ஊடகக் குழு ஒன்றில் இணைந்த 44 வயதுடைய ஜேர்மன் பெண்ணொருவர், பிரசவத்துக்காக காத்திருந்த அந்த 27 வயது பெண்ணுக்கு மொழிபெயர்ப்பு உதவிக்காக சென்றுள்ளார்.
அந்த உக்ரைன் பெண்ணுக்கு குழந்தை பிறந்த பின், அந்த ஜேர்மன் பெண்ணும் அவரது கணவரும் உணவகம் ஒன்றிற்கு உணவருந்தச் சென்றிருந்தபோது, தங்களுடன் உணவருந்த வந்த அந்த உக்ரைன் பெண் மற்றும் அவரது தாயின் உணவில் மயக்க மருந்தைக் கலந்துள்ளார்கள்.
தனக்கு மயக்கம் வருவதாகக் கூறிய அந்த 51 வயது பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்ற அந்த ஜேர்மன் பெண்ணின் கணவர், காட்டுப்பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று, அடித்துக்கொன்று ஏரி ஒன்றில் அவரது உடலை வீசியுள்ளார்.
பின்னர் அந்த 27 வயது பெண்ணிடம் அவரது தாய்க்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அவரையும் அடித்துக் கொன்று, அவரது உடலை தீவைத்து எரித்துவிட்டு, குழந்தையை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள் அந்த ஜேர்மன் தம்பதியர்.
இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக 43 வயதுடைய அந்த ஆணும் 44 வயதுடைய அந்தப் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அது தொடர்பான வழக்கு விசாரணை தென்மேற்கு ஜேர்மனியில் துவங்கியுள்ளது.
விடயம் என்னவென்றால், அந்த தம்பதியருக்கு ஏற்கனவே நான்கு மகன்கள் இருக்கிறார்கள். இருந்தும் ஒரு பெண் குழந்தை வேண்டும் என்பதற்காக, அவர்கள் அந்த உக்ரைன் பெண்ணையும் அவரது தாயையும் கொலை செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |