ஜேர்மன் தம்பதியருக்கு வெளிநாடொன்றில் சிறைத்தண்டனை
தங்கள் பிள்ளைகளை மூன்றரையாண்டுகளாக வீட்டுக்குள் அடைத்துவைத்திருந்த ஜேர்மன் தம்பதியருக்கு ஸ்பெயின் நாட்டில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் தம்பதியருக்கு சிறைத்தண்டனை
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் வீடொன்றை சோதனையிட்டார்கள்.
அப்போது அந்த வீட்டுக்குள் 8 வயதுடைய இரட்டைக் குழந்தைகளும் 10 வயதுடைய ஒரு சிறுவனும் டயாப்பர் மற்றும் மாஸ்க் அணிந்த நிலையில் வாழ்ந்துவந்தது தெரியவந்தது.

குப்பைக்கூளங்கள் நிறைந்த அந்த வீட்டில் மூன்றரையாண்டுகளாக அடைத்துவைக்கப்பட்டிருந்த அந்த பிள்ளைகள் வீட்டுக்கு வெளியே உள்ள தோட்டத்துக்குக் கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
கோவிட் போன்ற ஏதாவது தொற்று நோய் பிள்ளைகளை பாதித்துவிடக்கூடாது என்பதற்காகவே பிள்ளைகளை அடைத்துவைத்ததாக அந்த பெற்றோர் கூறிய நிலையில், அந்தப் பிள்ளைகள் சரியாக கவனிக்கப்படவில்லை என்பதும், உணவோ உடையோ அவர்களுக்கு சரியாக கொடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
பிள்ளைகளை சரியாக கவனிக்காமல், மனோரீதியாகவும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய அந்தப் பெற்றோருக்கு ஸ்பெயின் நாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இரண்டு ஆண்டுகள் 10 மாதங்கள் சிறையில் செலவிட உள்ளார்கள்.
அந்த பிள்ளைகளின் தந்தை ஒரு ஜேர்மன் குடிமகன், அவரது மனைவி ஜேர்மன் அமெரிக்க இரட்டைக் குடியுரிமை கொண்டவர் ஆவார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |